(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

மட்டு மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் மாசடைந்த குடிநீர் !நோயாளிகள் அவலம்?

மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவடிவேம்பு வைத்தியசாலையானது ஒரு பிரதேச வைத்தியசாலையாகும்.


இப்பிரதேச வைத்திய சாலைக்கு சித்தாண்டி மற்றும் மாவடிவேம்பு வந்தாறுமூலை ஆகிய பிரதேச மக்களே தினமும்  வந்து சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவ பரிசோதனைகள் சிறந்த முறையிலே மேற்கொள்ளப்படுகின்றது.

வைத்தியசாலையில் நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டு விடுதிகளில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந் நிலையில் வைத்தியசாலையில் குடிப்பதற்கு பயன்படுத்தப்படும் குடிநீர் மாசடைந்த நிலையில் காணப்படுகின்றது.

இதனால் நோயாளிகள் பெரும் அவதியுறுவதனையும் காணமுடிகின்றது.

இங்கு குடிப்பதற்கு உள்ள நீரை குடிப்பதற்கு பயமாக உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
மேலும் அருகில் காணப்படும் மருங்கையடி பிள்ளையார் ஆலயத்தின் நீர் குழாய்களில் நீரைப் பெற்று வந்து குடிப்பதையும் காணக்கூடியதாய் உள்ளது.

இது சம்மந்தமாக வைதியர்களோ வைத்தியசாலை உத்தியோகத்தர்களோ எது விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற் கொள்ளுமாறு  பிரதேச பொதுமக்களும்  நோயாளிகளும் கேட்டுக் கொள்கின்றனர்.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை