(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக்கட்டடம் , சிற்றுண்டிச்சாலை

மன்னார் தாராபுரம் அல் மினா மஹா வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடம் மற்றும் சிற்றுண்டிச்சாலை ஆகியவற்றை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திறந்துவைத்தார்.
ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இப்பாடசாலை கட்டிடத் தொகுதி திறப்பு விழா அதிபர் சரீபுதீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட நிறுவனத்தின் அதிகாரி நுஹ்மான், மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி செபஸ்டியன், கிரபைட் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் அலிகான் ஷரீப், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜெஸீல் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை