அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 33வது வருடாந்த விளையாட்டு விழா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
கொழும்பு ரோயல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த விளையாட்டு விழா எதிர்வரும் 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இறுதிநாள் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விளையாட்டு விழாவில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சகல மாகாண பாடசாலைகளில் இருந்து 39 ஆயிரத்து 700 மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
