
இரண்டு வாரங்களுக்கு முன்னர், 9,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடுமுழுவதிலும் 1,23,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் 13 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக மேல் மாகாணத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்க்பட்டுள்ளது.