
இதற்கிடையில் சேரி என்ற வார்த்தையை கூறியதால் பொதுமக்களின் அதிக எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார்.
ஆனால், எனது மகளை தவிர அந்த நிகழ்ச்சியில் உள்ள அனைவரும் நடிக்கின்றனர் என காயத்ரியின் தாய் கிரிஜா கூறியுள்ளார்.
அவர் கூறியதாவ, எனது மகள் மிகவும் தைரியமானவள். எதுக்கும் பயப்படாதவள். அவள் அமெரிக்காவில் படிச்சுட்டிருந்தப்போ மேட்ரிமோனி சைட்ல வரன் பார்த்து அவளுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம்.
நல்ல குடும்பம்னுதான் சொன்னாங்க. ஆனால், அவ மாமியார் அவளை மாப்பிள்ளைகிட்டயிருந்து பிரிச்சுட்டாங்க. அங்கிருந்து என் பொண்ணை காப்பாத்தி கூட்டிட்டு வராமல் போயிருந்தால் என்ன ஆகியிருப்பானு தெரியலை. அந்த சமயத்தில் அவள் மிக தைரியமாக எதிர்கொண்டாள்.
இப்படி எங்க வாழ்க்கையில் என்ன நடக்குதுனு தெரியாமல் பலரும் அரைகுறையா எழுதறாங்க. ஏதோ ஒரு வார்த்தையைச் சொன்னதுக்கு இப்படி தரக்குறைவா எழுதுறாங்களே, நாளைக்கு உண்மை தெரிஞ்சா கொட்டின வார்த்தைகளைத் திருப்ப முடியுமா? என்று கூறியுள்ளார்.