கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1,2,3ஆம் ஆண்டு மாணவர்களின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும், இன்று (03) ஆரம்பமாவதாக, அப்பல்கலைக்கழகத்தின் பிரதி உப வேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் கடந்த 3 மாதங்களாக இடம்பெற்றுவந்த அசாதாரண சூழ்நிலை முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதை அடுத்து, மீண்டும் பல்கலைக்கழகம் அதன் முழுமையான கல்வி நடவடிக்கைகளுக்காகத் தற்போது திறக்கப்படுகிறது.