
மன்னாரில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய அவர்,
‘ புதிய அரசியலமைப்புக்கான மக்கள் ஆணையை நாம் பெற்றிருக்கிறோம்.
புதிய அரசியலமைப்பு வரைவு இன்னமும் உருவாக்கப்படவில்லை. அதனை உருவாக்கும் பணிகள் தொடரும்,
அது உருவாக்கப்பட்டது, முன்னணி பௌத்த பீடங்களிடம் சமர்ப்பிக்கப்படும் அவர்களுடன் கலந்துரையாடுவோம்.
முன்மொழிவுகளை அளிக்கும் கட்டத்திலேயே இருக்கிறோம். எவரிடம் இருந்தும் முன்மொழிவுகளை நாம் பெற முடியும்.
புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை தொடருவது என்றும், அதில் மாற்றங்களைச் செய்வதில்லை என்றும் அனைவரும் இணங்கியுள்ளோம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.