வலி இன்றி வாழ்வில் இனிமை தான் வந்துடுமோ
அவரவர் தன் வாழ்க்கை
பாதையில் செல்லும் போது
முட்கள் காயம் கொள்ள செய்யும்
அதை கண்டு கண்ணீரை சிந்தி விடாதே
இருள் நிறைந்த பாதையில் செல்லும் போது
முட்கள் தெரிவதில்லை தானே
அவையை கடக்கும் போது
உணர செய்கின்றன வலியை
அவை இன்பத்தின் அருமையை
தெரியபடுத்த தான்
வரும் முள்ளு என
உணர்ந்து கடந்து செல்லு
இனிமையான பாதை
அமைத்துடுவாய் சந்ததிக்கு
இனிமையான பாதை நீ அமைத்தால்
உன் சந்ததிகளுக்கு
ஒளியான பாதை வந்துவிடுமே
அங்கே அங்கே
தெருவோரம் இருக்கும்
மூடர் உன்னை கேலி
பண்ணி முட்களை எறிவார்
அதனால் மனம் உடைந்து விடாதே
தந்த வலியை தாங்கும்
மன வலிமை அடைந்து
உன் இலக்கு பாதையை
நோக்கி நகர்ந்து செல்லு
முட்கள் தந்த வலி உதிர்ந்து போகும்......