
ஹாங்காங்கில் பெற்றோர்கள் குழந்தையின் படிப்பு செலவிற்கு சுமார் 130,000 டொலர் வரையில் செலவு செய்கிறார்கள்.
இதற்கு அடுத்தப்படியாக ஐக்கிய அரபு எமிரெட்ஸில் பெற்றோர்கள் 100,000 டொலர் வரையிலும், சிங்கப்பூரில் 70,000 டொலர் வரையிலும் செலவு செய்கிறார்கள் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.
குறித்த ஆய்வானது 15 நாடுகளை சேர்ந்த 8,481 பெற்றோர்களின் கருத்துக்களை கொண்டு எடுக்கப்பட்டு உள்ளது. அவுஸ்திரேலியா, கனடா, சீனா, எகிப்து, பிரான்ஸ், ஹாங்காங், இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா, மெக்சிகோ, சிங்கப்பூர், தைவான், ஐக்கிய அரபு எமிரெட்ஸ், பிரித்தானியா மற்றும் அமெரிக்க நாடுகளில் எடுக்கப்பட்டு உள்ளது.
இதில் பிரான்ஸ் நாட்டு பெற்றோர்கள் ஹாங்காங் நாட்டின் பெற்றோரை விடவும் 8-ல் ஒரு பங்கு மட்டுமே தங்களது குழந்தைகளின் படிப்புக்காக செலவிடுகின்றனர். அதாவது குழந்தைகளின் படிப்புக்காக 17,000 டொலர் மட்டுமே பிரான்ஸ் பெற்றோர் செலவிடுவதாக தெரிய வந்துள்ளது.
இந்த 15 நாடுகளில் பிரித்தானியா 9வது இடத்தையும் பிரான்ஸ் 15-வது இடத்தையும் பிடித்து உள்ளது. பிரான்ஸ் நாட்டில் பெற்றோர்கள் ஆசிய நாட்டவர்களை விடவும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த அக்கறை இன்றி உள்ளதாக குறித்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அங்குள்ள 36% மக்கள் மட்டுமே தங்கள் குழந்தைகள் கல்வி அறிவு பெற்று நல்ல வேலைவாய்ப்பை பெறுவார்கள் என நம்புவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
