(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டு பணிகள் இம்முறை 3 கட்டங்களின் கீழ்

இம்முறை உயர்தரப் பரீட்சை மதிப்பீட்டு பணிகள் மூன்று கட்டங்களின் கீழ் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


முதற் கட்டமாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மதிப்பீட்டு பணிகள் இடம்பெறவுள்ளன.

இரண்டாம் கட்டப் பணிகள் செப்டம்பர் 13 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையும், மூன்றாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளன.

மேலும் இந்த மதிப்பீட்டுப் பணிகள் 31 மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மதிப்பீட்டுப் பணிகள் இம்மாதம் 31 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை