தேசிய
ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில்
நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்திய வீதி
அபிவிருத்தித் திட்டம் அடங்கலாக பல்வேறு திட்டங்களுக்கென 8000 மில்லியன்
ரூபாவுக்கு மேற்பட்ட தொகை செலவிடப்பட உள்ளது.
இது
தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்
திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் (12)
இடம்பெற்றது.
வீதி
அபிவிருத்தித் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின்
பொறியியலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல்
பணிப்பாளர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு
மாவட்டத்தின் கிரான் பாலம், குறுமன்வெளி - மண்டூருக்கான பாலம்,
நரிப்புல்தோட்டம் - பன்குடாவெளி, கிண்ணையடி , ராணமடு ஆகிய பாலங்கள்
அமைத்தல், 1344 கிலாமீற்றர் கிராமிய வீதி அமைப்பு, மட்டக்களப்பிலிருந்து
கல்குடா வரையான கடற்கரையோரப் பாதை ஆகியன அமைப்பதற்கான அனுமதிகள்
அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க
அமைச்சினால் 10.08.2017 திகதிய கடிதம் மூலம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு
மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய முக்கிய அபிவிருத்தித்திட்டங்கள்
தொடர்பில் பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகரும் வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்திக்
குழுவின் தலைவருமான ஆர்.பாஸ்கரலிங்கத்திடம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் முன்வைத்த
திட்ட அறிக்கைக்கமைய பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைவாக இத்திட்டங்கள்
முன்னெடுக்கப்படவுள்ளன.
பிரதமரின்
அறிவுறுத்தலுக்கமைவாக அரசாங்க அதிபரிடம் தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க
அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி கேட்டுக் கொண்டதற்கிணங்க அரசாங்க
அதிபருக்கு இத்திட்டங்களை விரைவாக செயற்படுத்துவதற்கான அனுமதி
கிடைக்கப்பெற்றுள்ளது.
இதில்,
வெள்ள காலத்தில் வீதிப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வள்ளங்கள் மூலமான
போக்குவரத்தினை மேற்கொள்ளும் அதே நேரம், ஏனைய காலங்களிலும்
போக்குவரத்துப்பிரச்சினைகளை எதிர் கொண்ட கிரான் பிரதேச செயலாளர் பிரிவின்
முக்கிய போக்குவரத்துப்பாதையான கிரான் - தரவைப்பிரதேசத்துக்கான பாலம்
1531மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது.
இயந்திரப்பாதைப்
போக்குவரத்து நடைபெற்றுவரும் களுவாஞ்சிக்குடி(மண்முனை தென் எருவில்
பற்று) மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர்பிரிலுகளை இணைக்கும்
குறுமன்வெளி - மண்டூர் ஆகிய பிரதேசங்களுக்கிடையிலான ஆற்றுக்கு மேலாக 1400
மில்லியன் ரூபா செலவில் பாலம் அமைக்கப்படவுள்ளது.
ஏறாவூர்
பற்று பிரதேச செயலாளர் பிரிவின் நரிப்புல்தோட்டம் - பன்குடாவெளி ஆகிய
பிரதேசங்களுக்கிடையிலான ஆற்றைக் குறுக்கறுத்து 650 மில்லியன் ரூபா செலவில்
பாலம் அமையவுள்ளது.
கோரளைப்பற்று
மற்று கோரளைப்பற்று தெற்கு பிரதேச செலயகப்பிரிவுகளை இணைக்கும் கிண்ணையடி -
முருக்கன் தீவு ஆகிய பிரதேசங்களுக்கிடையிலான பாலம் 850 மில்லியன் ரூபா
செலவிலும் போரதீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மாலையன்கட்டு - ராணமடு
ஆகியபிரதேசங்களை இணைக்கும் பாலம் 120 மில்லியன் ரூபா செலவிலும்
அமைக்கப்படவுள்ளன.