ஸ்ரீலங்கா கிரிக்கெட் கிரிக்கெட் ஏயிட் என்ற பெயரிலான விசேட கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது.
இலங்கையில்
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக நிதி திரட்டும்
நோக்கில் இந்தப் போட்டி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இதன் கீழ் செப்டெம்பர் மாதம் எட்டாம் திகதி கொழும்பு ஆர் பிறேமதாஸ மைதானத்தில் ரி-வென்டி கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது;
சர்வதேச
கிரிக்கெட் அணிகளின் 11 வீரர்களை உள்ளடக்கிய அணியும், இலங்கை கிரிக்கெட்
அணியின்; தற்போதைய வீரர்களையும் முன்னாள் வீரர்களையும் உள்ளிடக்கிய
அணியும் இதில் பங்கேற்வுள்ளன.