(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

குப்பையின் பலம் - மின்உற்பத்தி திட்டம் ஆரம்பம் !

இலங்கையில் முதல் தடவையாக குப்பைகளை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் குப்பையின் பலம் என்ற  வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு இந்த வேலைத் திட்டத்தை  நடைமுறைப்படுத்துகிறது.
 
இந்த திட்டத்தின் கீழ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இரண்டு நிலையங்களின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் வியாழக்கிழமை கெரவளப்பிட்டியவில் ஆரம்பமாகும்.இரண்டாயிரத்து 700 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மின் நிலையங்களின் மூலம் 20 மெஹாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இரண்டு தனியார் நிறுவனங்கள் இதற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன. 
18 மாதங்களுக்குள் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படும். 
 
இதற்கு இணைவாக புத்தளம் அறுவாக்காடு பிரதேசத்தில் தீங்கற்ற வகையில் குப்பை சேகரிப்பு மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை