(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

திருப்பெருந்துறையில் கொட்டும் குப்பைகளில் மீண்டும் தீ !

மட்டக்களப்பு - மாநகரை சபையின் திருப்பெருந்துறையில் கொட்டும் குப்பைகளில் மீண்டும் தீ பரவியுள்ளது.


குறித்த பகுதியில் 26 பகல் தீ பரவியுள்ளது. கடந்த 22 ஆம் திகதி இந்த பகுதியில் பாரியளவில் தீ பரவியதுடன், தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 26இந்தப் பகுதியில் தீ பரவல் ஏற்பட்டு, மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் 50 வருடங்களாக குப்பை கொட்டும் இந்தப் பகுதியில் தீ பரவியதற்கான காரணம் ஏதும் தெரியாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை