(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

திருகோணமலை அபிவிருத்தியில் பங்கெடுக்க ஜப்பான் ஆர்வம்.

திருகோணமலையின் அபிவிருத்தியில் பங்கெடுக்க ஜப்பான் ஆர்வம் கொண்டுள்ளது என்று சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் கெனிச்சி சுகனுமா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுனர் றோகித போகொல்லாகமவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிழக்கின் சமூக, பொருளாதார அபிவிருததி தொடர்பாகவும். திருகோணமலை நகரின் அபிவிருத்தி தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

திருகோணமலை அபிவிருத்தி  தொடர்பான திட்டங்களை வரைய ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சிங்கப்பூருக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பங்கெடுக்க ஜப்பானும் விருப்பம் கொண்டுள்ளது என்று ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை