வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமக்கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா தீர்த்தம் நாளை இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் நாடெங்கிலும் இருந்து மூவின மக்களும் லட்சக்கணக்கில் கூடியுள்ளனர்.
அத்துடன்,மாணிக்கங்கை செல்லக்கதிர்காமப் பிரதேசத்தில் பல்லாயிரம் கணக்கான மக்கள் திரண்டுள்ளதுடன், கடைத் தொகுதிகள் களைகட்டியுள்ளன.
பாதயாத்திரையாகச் சென்ற அனைவரும் தீர்த்தத்தில் பங்கேற்க வேண்டு மென்பது
மரபு சம்பிரதாயமாகும். கொடியேற்றத்திற்குச் சென்று திரும்பியவர்கள்
இடைநடுவில் வந்தவர்கள் அனைவரும் நேற்றைய தினம் அங்கு சென்றுள்ளனர்.
தீர்த்தத்திற்கு
செல்லும் மக்களின் போக்குவரத்து நலன்கருதி நூற்றுக்கணக்கான பேருந்துகள்
நேற்றும், நேற்று முன்தினமும் கதிர்காமத்தை சென்றடைந்தன.
தீர்த்தம் நிறைவடைந்த பின் அடியார்களை ஏற்றி செல்ல விசேட பேருந்து சேவையை தொடர பஸ்டிப்போ தீர்மானித்துள்ளது.
இதற்காக நேற்று பல பஸ்கள் பயணிகளின்றி வெறுமனே ஸ்ரீ கதிர்காமத்தை நோக்கிச் சென்றுள்ளன.
இதவேளை, உகந்தமலை முருகனாலயத்தின் ஆடிவேல்விழா தீர்த்தம் இன்று(7) ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சீதாராம் குருக்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
மேலும்,
இங்கும் விசேட பஸ் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. காரைதீவு
மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல்விழா தீர்த்தோற்சவம் இன்று
காரைதீவு சமுத்திரத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



