(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர், சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் சந்திப்பு

சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் டிமிற்றி ஏ மிக்கெலோவ்ஸ்கி சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.



சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாக இருந்தது என்றும் இதன் போது இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில், சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக, கபில வைத்தியரத்ன நியமிக்கப்பட்ட பின்னர், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்கள் அவரைச் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றனர்.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை