கொழும்பு நகர
வீதிகளில் வாகன நிரல் முன்னுரிமை அடிப்படையில் பஸ்களுக்கான முன்னுரிமை
தொடர்பான செயற்பாடு எதிர்வரும் 15ம் திகதி முதல்
நடைமுறைப்படத்தப்படவுள்ளதாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு
தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக மொறட்டுவ சந்தியிலிருந்து
கட்டுபத்த வரையிலும், சவோய் சினிமா மண்டபத்திலிருந்து பம்பலப்பிட்டி சந்தி
வரையிலும் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கட்டுபத்த சந்தியிலிருந்து மலிபன் சந்தியவரையிலும், பம்பலப்பிட்டி சந்தியிலிருந்து பித்தளை சந்தி வரையிலும் முன்னுரிமை நிரல் அடிப்படையில் (The Priority System Track) எதிர்வரும் 22ம் திகதியிலிருந்து ஆரம்பமாகின்றது.

ஏனைய கொழும்பு வீதிகளிலும் இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.