(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

இனவாதத்தையும் மதவாதத்தையும் ஏற்படுத்த எந்தவொருநபருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது - பிரதமர்

இனவாதத்தையும் மதவாதத்தையும் நாட்டிற்குள்ளே உருவாக்க எந்தவொருநபருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
 
 
தலாவ ஞானோதய பிரிவெனாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கத்தவர்களை சந்தித்தார். நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார். 
 
 
உத்தேச புதிய அரசியல் யாப்பு சட்டமூலம் எவ்விதத்திலும் இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இடமளிக்கக்கூடியதும் அல்ல. புதிய அரசியல் யாப்பு சட்டமூலத்தில் எவ்விதமான குறைபாடுகளும் இல்லாத போதும் குறித்த சில நபர்கள் இனவாதத்தையும் மதவாதத்தையும் இதனுள் இருப்பதாக சுட்டிக்காட்டி முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகிறார்கள் என்று சுட்டிக்காட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தேச அரசியலமைப்பின் மூலம் பௌத்த சமயத்திற்குள்ள இடம் எந்த வகையிலும் மாற்றப்பட மாட்டாது என்றும் கூறினார். 
 
உத்தேச புதிய அரசியல் யாப்பு சட்டமூலத்தில் பௌத்த சமயத்திற்கு உரிய இடத்தை இல்லாமல் செய்வதற்கோ, நாட்டின் ஒருமைப்பாட்டை குறைவாக மதிப்பிடுவதற்கோ எந்தவிதமான நடவடிக்கைகளும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். 
 
சிலர் புதிய அரசியல் யாப்பு சட்டமூலத்தில் பௌத்த சமயத்திற்கு உரிய இடம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டை பிரிப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் மேற்கொண்டு வரும் பிரசாரங்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை. அதேபோல் பொய்யான பிரச்சாரங்களின் மூலம் மக்களை ஏமாற வேண்டாமென்றும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். ஒரே நாட்டிற்குள் சமவாய்ப்புகளை ஏற்படுத்துவதே நோக்கமாகும். நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்பட மாட்டாது. புதிய அரசியல் யாப்புத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் முயற்சி ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகும். ஒரே நாடு என்ற சொல் அரசியல் யாப்பு சட்ட மூலத்தில் 1972ம் ஆண்டு குடியரசு யாப்பில் உட்படுத்தப்பட்டிருந்தது. 1978ம் ஆண்டு அரசியல் யாப்பிலும் இது உள்வாங்கப்பட்டிருந்தது. அரசியல் யாப்பு சட்டமூலத்தின் 13வது திருத்தச் சட்டத்திலும் இது எவ்வித மாற்றமும் அடையவில்லை. புதிய அரசியல் யாப்பு சட்டமூலத்திலும் இந்த விடயம் எந்தவிதத்திலும் மாற்றமடைய மாட்டாது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு மேலும் தெரிவித்தார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை