ஒன்றுபட்ட, சிறிலங்காவின் இறையாண்மையின் பக்கமே இந்தியா எப்போதும்
நிற்கும் என்று இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன்
தெரிவித்துள்ளார்.
சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் 8
ஆவது கருத்தரங்கின் முடிவில், சுமித்ரா மகாஜன் தலைமையிலான இந்திய
குழுவினர், சிறிலங்கா சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான குழுவினரைச்
சந்தித்தனர்.
இதன் போது, இந்தியாவின் நிலைப்பாட்டை இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும்
முயற்சிகள் தொடர்பாக சிறிலங்கா சபாநாயகர் இந்திய குழுவினருக்கு
விளக்கமளித்துள்ளார்.
