(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

யாழ். மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்றைய தினம் (21) அதிகரிக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.













யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்த உள்ளுராட்சி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கு அதிகளவான கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

அதனால் அதிகளவானோர் வேட்புமனுவினை தாக்கல் செய்ய வருவார்கள் எனவும் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக யாழ்.மாவட்ட செயலகத்துக்குள் அரச வாகனங்களை தவிர்ந்த ஏனைய எந்தவொரு வாகனமும் உட் பிரவசிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நண்பகல் 12 மணியுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் கால எல்லையானது முடிவடைவதால் அதற்கு முன்பாக கட்சிகள் சுயேட்சை குழுக்கள் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார்.




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை