ரத்மலானை பொருபனை எஹொடஹேன ஸ்ரீ விசுத்தாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாது கோபுரத்தை திறந்து வைக்கும் புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பங்களிப்புடன் நேற்;று (20) முற்பகல் இடம்பெற்றது.
விகாரைக்கு சென்ற ஜனாதிபதி, விகாராதிபதி சங்கைக்குரிய பரதன்வல கல்யான தஜ தேரரை சந்தித்ததுடன், சமயக் கிரியைகளில் கலந்துகொண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாது கோபுரத்தின் நினைவு பலகையை திரை நீக்கம் செய்து வைத்த ஜனாதிபதி , மலர் பூஜை செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.
மத்திய மாகாண தலைமை சங்க நாயக்க தேரர் சங்கைக்குரிய கம்பொல சுகுன தஜ நாயக்க தேரர் இந்நிகழ்வில் பிரதான அனுசாசன உரையை நிகழ்த்தினார். இந்த தாது கோபுரத்தை நிர்மாணித்த ஆர்.எம். காமினிக்கு ஜனாதிபதி நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.
பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரத்ன, மேல் மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய, முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
