(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

“வட்ஸ் அப்” தினமும் 100 கோடி பேரின் பயன்பாட்டில் !!

உலகம் முழுவதும் தினந்தோறும் 100 கோடிப் பேர் “வட்ஸ் அப்” சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தி வருவதாக வட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.


வட்ஸ்அப் தளம் உலகம் முழுவதும் 60 மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.  வட்ஸ் அப் மூலம் 55 பில்லியன் தகவல்கள் அதாவது 5 ஆயிரத்து 500 கோடி தகவல்கள் தினந்தோறும் பகிரப்படுகின்றது.

இவற்றில் தினமும் நூறு கோடி தகவல்கள் வீடியோ வடிவிலும், 450 கோடி தகவல்கள் புகைப்பட வடிவிலும் பகிரப்படுவதாக வட்ஸ் அப் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

வட்ஸ் அப் நிறுவனத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை