(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

ஷிராந்திக்கும் யோஷிதவுக்கும் வாக்குமூலம் வழங்க வேறு தினங்கள் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கும், அவரது மகன் யோஷித ராஜபக்ஷவுக்கும் குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்வதற்கு வேறு தினங்களை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இவர்களில் ஷிராந்தி ராஜபக்ஷ நேற்றைய (27) தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார். அத்துடன், யோஷித ராஜபக்ஷ இன்று (28) அழைக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், இருவரும் குறித்த தினங்களில் தங்களுக்கு வாக்கு மூலம்  வழங்க CID யிற்கு வர முடியாதுள்ளதாக தமது சட்டத்தரணிகள் மூலமாக  அறிவித்துள்ளதாகவும் பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளது.

சிறிலிய சவிய அறக்கட்டளை நிறுவனத்திற்கு செஞ்சிலுவைச் சங்கத்தினால் வழங்கப்பட்ட ஜீப் வண்டியை யோஷித ராஜபக்ஷவின் பாவனைக்கு வழங்கியமை தொடர்பில் வாக்கு மூலம் பெறவே இவர்கள் இப்பிரிவுக்கு வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை