(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

விஜேதாஸ ராஜபக்ஸவின் கருத்தை ஏற்க முடியாது: மனோ கணேசன்

அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்து வரும் கருத்துக்களை ஏற்க முடியாது என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பெளத்த விகாரைகள் விவகாரத்தில் எவரும் தலையிட முடியாது எனவும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தொடர்ந்து கூறிவருவதாக அமைச்சர் மனோ கணேசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ற சமூக அமைப்புக்கள் தனது அமைச்சின்கீழ் வருவதால், அத்தகைய நிறுவனங்கள் தொடர்பில் முறைப்பாடு இருப்பின் அதனை அவர் தன்னிடம் கூற வேண்டும் என அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பௌத்த விகாரைகள் விவகாரத்தில் அரசாங்கம் தலையிட முடியாது என விஜேதாஸ ராஜபக்ஸ எவ்வாறு கூற முடியும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் அதியுயர் அதிகாரம் மக்களுக்கே உள்ளதாகவும் மக்களே அரசாங்கத்தையும் பாராளுமன்றத்தையும் தெரிவு செய்வதாகவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம், அரசாங்கத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் மேலே மதத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ள ஈரானைப் போன்றதொரு நாடு இலங்கை அல்லவெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரலாற்றில் பௌத்த துறவிகள் சட்டத்தை மீறிய பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையும் அமைச்சர் மனோ கணேசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவை படுகொலை செய்த பிக்குவிற்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை