
ஆயுதங்களுடனேயே இவர்கள், கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர், இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்றும் மற்றுமொரு, அந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆடைவர்த்தக நிலையத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் என்றும், ஏனைய இருவரும் பல்வேறான குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அந்த பொலிஸ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து 40 இலட்சத்து 51 ஆயிரம் ரூபாய், ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டு, அந்த துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் -56, ரி-56 ரவைக்கான மெகஷீன்கள் இரண்டு, அலைபேசிகள் 8 உள்ளிட்டவை அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் ஐவரையும் மஹர நீதவான் நீதிமன்றத்தில், நேற்று (03) ஆஜர்படுத்திய போது, அவர்களை 48 மணிநேரம் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.