கடந்த சனிக்கிழமை நல்லூர் பின் வீதியில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடந்த
துப்பாக்கிச் சூட்டில் பலியான நீதிபதியின் மெய்பாதுகாவலருக்கான அஞ்சலி நிகழ்வு நேற்று மாலை 6.00 மணிக்கு
இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளரும் ஆசிரியருமான தர்சானந் தலைமையில் குறித்த மெய்ப்பாதுகாவலர் சுடப்பட்ட இடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது உயிரிழந்த மெய்ப் பாதுகாவலரின் படத்துக்கு தீபம் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது.
தமிழ் இளைஞர் அணி ஏற்பாடு செய்திருந்த இவ் அஞ்சலி நிகழ்வில் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
