(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

தமிழர்கள் புதிய பாதையில் அணிதிரள வேண்டும் - கருணா அம்மான் அறைகூவல்!

நல்லாட்சி என்று வெளியுலகிற்கு கூறும் அடாவடி ஆட்சியில், துப்பாக்கிச் சூடுகள் மட்டுமே எஞ்சியுள்ளதனால் தமிழர்கள் புதிய பாதையில் அணிதிரள வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) அறைகூவல் விடுத்துள்ளார்.


யாழ்.துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில்  (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நல்லாட்சி என்று கூறிக்கொண்டு பொய் ஆட்சியும் அடாவடி ஆட்சியும் நடத்தும் இந்த அரசாங்கத்தின் அடாவடித்தனம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றது. இந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் மூன்று சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அன்றைய ஜே. ஆர் ஜெயவர்த்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை நடத்தி மூவாயிரம் அப்பாவி தமிழ்மக்களை 1983 யூலையில் படுகொலை செய்தது.

தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமும் இதை மீண்டும் ஆரம்பித்து விடுமோ என்ற அச்சம் வட.கிழக்கில் ஏற்பட்டுள்ளது. நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி பாரிய சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

 இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டுமென்றால் தமிழர்களாகிய நாங்கள் வேறுபாடின்றி ஒற்றுமைப்பட வேண்டும்” என கருணா அறைகூவல் விடுத்துள்ளார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை