
வடமராட்சியில் உள்ள துன்னாலைக்கும் கலிகைச் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே வீதியில் ரயர்கள் எரிக்கப்பட்டுள்ளன.
இதனால், பருத்தித்துறை- கொடிகாமம் வீதி ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. அத்துடன் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞன் துன்னாலையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படம்- உதயன்
