
இவர்கள் பருத்தித்துறை காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உதவி ஆய்வாளரான சிவராசா மற்றும் காவலரான மொகமட் முபாரக் ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளவர்களாவர்.
கைது செய்யப்பட்ட இருவரும், சேவையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இருவரையும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படவுள்ளதாகவும் சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.