இந்தியாவுக்கு ஏதிரான டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
கிங்ஸ்டன்
நகரில் இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய டி-20 போட்டி
நடைபெற்றது. நாணயசுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை
தெரிவு செய்தது.
இதனையடுத்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி மேற்கிந்திய தீவுகள்
அணியின் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தனர். 22 பந்துகளில் 39 ஓட்டங்களை
குவித்த கோஹ்லி 6-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 12 பந்துகளை
மட்டுமே எதிர்கொண்ட தவான் நான்கு பவுண்டரிகளை விளாசி 23 ஓட்டங்கள் எடுத்து
ரன் அவுட் ஆனார்.
பின்னர், களமிறங்கிய ரிஷப் பாந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் தினேஷ் 29 பந்துகளில் 48
ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோனி 2
ஓட்டங்களில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினார்.
20 ஓவர்களின் முடிவில் 6
விக்கெட்டுகள் இழப்புக்கு இந்திய அணி 190 ஓட்டங்களை குவித்தது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்களில் டெய்லர் மற்றும்
வில்லியம்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து
191 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி
களமிறங்கியது. முதலில் கறமிறங்கிய கிறிஸ் கெய்லும், எவின் லீவிசும் அதிரடி
காட்டினார்கள்.
இதனிடையே 18 ஓட்டங்கள் எடுத்திருந்த கிறிஸ் கெய்ல் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய சாமுவேலும், எவின் லீவிசும் நிலைத்து நின்று ஆடினார்கள். இதில் லீவிஸ் அபாரமாக விளையாடி சதமடித்தார்.
18.3
ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 194 ஓட்டங்களை குவித்து 9 விக்கெட்
வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த
சாமுவேல் 36 ஓட்டங்களும், லீவிஸ் 125 ஓட்டங்களும் எடுத்தனர்.

