கருப்பு திராட்சையை விட அதன் விதையில் ஏராளமான மருத்துவ நன்மைகள்
நிறைந்துள்ளது. திராட்சைப் பழத்தை விட, அதன் விதையில் புரோ ஆன்தோ சயனிடின்
எனும் சத்து அதிகமாக உள்ளது.
கருப்பு திராட்சை விதைகளின் மருத்துவ நன்மைகள்
- ரத்தக்
குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்தக் குழாய்களின் வீக்கம், ரத்த கொதிப்பு
ஆகிய பிரச்சனைகளை குணமாக்க திராட்சை பழத்தின் விதை பயன்படுகிறது.
- மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்த இந்த கருப்பு திராட்சையின் விதை பெரிதும் பயன்படுகிறது.
- கருப்பு
திராட்சையின் விதையானது, ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்ட்ராலை கரைத்து,
சர்க்கரை நோய் மற்றும் மரத்துப்போதல் போன்ற பிரச்சனையை குணமாக்குகிறது.
- சிறுநீரகச் செயல்பாட்டின் குறைகளை சரிசெய்து, மாலைக்கண் நோய் மற்றும் கண்புரை போன்ற கண் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
பெண்களின்
மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும்
புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது.