தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். முன்னதாக
‘பிரேமம்’ படத்தில் நடித்திருந்தார். நடுத்தர வீட்டு குடும்ப பெண்ணாக,
கிராமத்து பெண்ணாகவே அவர் இதுவரை நடித்து வந்தார்.
தற்போது தெலுங்கு
படங்களிலும் நடிப்பதால் கிளாமராக நடிக்க வேண்டி உள்ளது. கமர்ஷியல்
ஹீரோயினாக வேண்டுமென்றால் கிளாமர் காட்டியாக வேண்டும் என்று அவருக்கு
தோழிகள் அட்வைஸ் கூறினர்.
இதையடுத்து கவர்ச்சிக்கு மாற முடிவு செய்தார்.
பிரத்யேகமாக போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சி ஸ்டில்ஸை இணைய தளத்தில்
வெளியிட்டார்.
ஆனால் இந்த முயற்சி அவருக்கு புதிய பட வாய்ப்புகள் பெற்றுத்
தருமா என்பது சந்தேகமே என சிலர் கூறுகின்றனர்.
டாப்லெஸ், நிர்வாணம் என சில ஹீரோயின்கள் துணிச்சலாக தங்களது படங்களை
வெளியிட்டு வரும் நிலையில், 1960கள் பாணியிலான உடைகளை அணிந்து இதுதான்
கவர்ச்சி என அனுபமா வெளியிட்டிருக்கும் ஸ்டில்கள் பற்றி ரசிகர்கள்
சரமாரியாக கமென்ட் வெளியிட்டு வருகின்றனர்.
அனுபமா, இந்த கவர்ச்சி போதாது
உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம் என அவர்கள் ஆவல் வெளியிட்டுள்ளனர்.
ரசிகர்களின் இந்த அட்வைஸ் அனுபமாவின் உடையை இன்னும் எவ்வளவு
குறைக்கப்போகிறது என்பது போகபோகத் தான் தெரியும்.
