(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

ஆகாயத்தில் இருந்து மஞ்சள் நிற திரவம் ஒன்று விசிறப்பட்டமையால் மாணவிகள் காயம்

யாழில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை மாணவிகள் மைதானத்தில் நின்றிருந்த வேளை ஆகாயத்தில் இருந்து மஞ்சள் நிற திரவம் ஒன்று விசிறப்பட்டமையால் மாணவிகள் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.


காயமடைந்த 16 மாணவிகளும் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மாணவிகள் மைதானத்தில் நின்றிருந்த வேளை அவர்கள் உடலில் மர்மமான முறையில் மஞ்சள் நிற திரவம் விசிறப்பட்டு உள்ளது.

அவை ஆகாயத்தில் இருந்தே விசிறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த திரவம் உடலில் பட்டதும் மாணவிகளுக்கு எரிவுகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் உடனடியாக பாதிக்கபப்ட்ட மாணவர்கள் வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை