
ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் நேற்று (19) பிற்பகல் நாட்டை வந்தடைந்தார்.
ஜூலி பிஷப், வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் நேற்று மாலை கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதே அவரது இலங்கைக்கான விஜயத்தின் நோக்கமெனவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.