எதிர்வரும் ஆகஸ்ட் 02ம் திகதி நள்ளிரவு முதல் செப்டம்பர் 02ம் திகதி வரையான
காலத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள
மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்துவதற்கு தடை
செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாதிரி வினாத்தாள்களை அச்சிடல், அவற்றை விநியோகித்தல், மாதிரி வினாத்தாள்களை வழங்குவதாக பதாகைகள் ஒட்டுவது, துண்டுப் பிசுரங்களை விநியோகித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளரின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை மீறி வகுப்புகளை நடத்துபவர்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்துக்கோ அல்லது அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்துடனோ தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு அவர் கூறியுள்ளார்