(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

தேர்தல் முறைமையில் மாற்றம்:பிரதமர் !

ஒரே தினத்தில் சகல மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடாத்துவது தொடர்பில் அமைச்சரவை கொள்கையளவில் தீர்மானம் ஒன்றுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பிரதமரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

தேர்தலை ஒரே தடவையில் நடாத்தாமல், தனித்தனியாக முன்னெடுப்பதனால், காலம், வளங்கள், மனித சிரமம் என்பன வீணடிக்கப்படுவதாகவும், இதனால் அரச இயந்திரத்துக்கு பிரச்சினையாக உள்ளதாகவும் இப்பிரேரணையின் போது பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

எல்லை நிர்ணயத்தை வைத்துக் கொண்டு அரசாங்கம் உள்ளுராட்சி சபைத் தேர்தலை இழுத்தடிப்புச் செய்து வந்தது. இதற்கு தற்பொழுது வேறு நியாயங்களை முன்வைக்கின்றது.

எதிர்வரும் செப்டம்பரில் சில மாகாணங்களின் ஆயுட்காலம் முடிவடையவுள்ளது. இதற்கான தேர்தல் நிச்சயம் வரும் என அனைவரிடமும் எதிர்பார்ப்பு வரும் விதத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில், மாகாண சபைத் தேர்தல்கள் அனைத்தையும் ஒரே முறையில் நடாத்த வேண்டும் என்ற தீர்மானம், ஏனைய சகல மாகாணங்களினதும் ஆட்சிக் காலம் முடிவடையும் வரை எதிர்வரும் செம்படம்பரில் காலாவதியாகும் மாகாண சபைகளும் காத்திருக்க வேண்டி வருமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை