(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

பிரபாகரனைத் தோற்கடிக்க உதவியது – இந்திய- சிறிலங்கா உடன்பாடே /நவீன் திசநாயக்க

1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய- சிறிலங்கா சமாதான உடன்பாடே, வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடிக்க உதவியது என்று சிறிலங்காவின் அமைச்சர் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.



“இந்திய- சிறிலங்கா சமாதான உடன்பாடு கையெழுத்திடப்பட்ட போது, எனது தந்தையாரான காமினி திசநாயக்க ஐதேக அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். அப்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சி அந்த உடன்பாட்டை எதிர்த்தது.

அந்த உடன்பாடு கைச்சாத்திடப்படாது போயிருந்தால், வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தோற்கடிக்க, சிறிலங்காவுக்கு  இந்தியா ஆதரவு அளித்திருக்காது.

1987ஆம் ஆண்டுக்குப் பின்னர், பிரபாகரனைத் தோற்கடிப்பதற்கான சிறிலங்காவின் நகர்வுகளுக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

பிரபாகரனுக்கு இந்தியா உதவியிருந்தால் , சிறிலங்காவில் நிலைமைகள் மோசமாக இருந்திருக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

NEWS PUBLISHED BY - COLOMBO SINHALA MEDIA 
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை