யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் நள்ளிரவு தாண்டிய இந்நேரத்தில் இடி
மின்னலுடன் கூடிய மழை பொழிந்து வருகிறது.
நீண்ட
காலத்தின் பின் பொழியும் இந்த மழையால் யாழ்ப்பாண மண், வாசம் பெற்று
விளங்குவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
நாட்டில் நிலவிவந்த கடும் வறட்சி நிலையினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களைச் சந்தித்துவந்துள்ளனர்.
அத்துடன் வறட்சியின் காரணமாக பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்து நீர் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருந்தது.
இதனால் யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டுவந்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் பிற்பகல் வேளையில் வவுனியா மாவட்டத்திலும் மழை பொழிந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே தற்பொழுது யாழ்ப்பாணத்திலும் மழை பெய்துவருவதாக அறியக்கிடைக்கின்றது!
இதேவேளையில்
கடந்த மாதங்களாக நிலவிவந்த கடும் வறட்சி நிலையினால் யாழ்ப்பாணத்தின்
குளங்கள் வற்றிப்போயுள்ள நிலையில் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை
அறிந்ததே. மாவட்டத்தின் பெரிய தீவான, நெடுந்தீவில் உள்ள குதிரைகள்
நீர்ப்பற்றாக்குறையினால் இறந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்க அம்சமாகும்!
