
யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களால் கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இத் தாக்குதல் சம்பவத்தில் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
எனினும், பயணங்களிற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இத் தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.