
ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பல்வேறு எதிரப்பு வந்திருந்தாலும், அந்த நிகழ்ச்சியை நான்கு கோடிக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுவருகின்றனர் என அந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், வரும் நடிகை ஓவியாவிற்கு அதிக ஆதரவு இளைஞர்கள், சினிமாப் பிரபலங்கள் முதல் நிகழ்ச்சியை தொடர்ச்சியைாக பார்வையிட்டுவரும் அனைவரும் கொடுத்துவருகிறார்கள்.
இதனால் நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஓவியா தான் சாதிப்பார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், அப்படியொரு எதிர்பார்ப்பு இருக்குமாயின் நிகழ்ச்சியின் சுவாரசியம் இருக்காது என்று நினைத்து ஓவியாவை ஓரம் கட்டப்படுகிறார் என ஓவியா ரசிகர்கள் கருத்து வெளியிடுகிறார்கள்.
நேற்று, ஓவியாவையும், காயத்திரியையும் சமாதானம் செய்யும் நோக்கில் பிக் பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்து அதன் முடிவில் அங்கே காயத்திரிக்கும் ஓயாவிற்கும் இருந்த பிணக்குகள் மறைந்து காயத்திரியும், ஓவியாவையும் சகஜமாக காட்டினர்.
பூவோடு சேர்ந்த நாரும் நறுமணம் வீசுவது போன்று ஓவியாவோடு காயத்ரியை சேர்த்து காயத்திரியை நல்லதாக காட்ட நினைக்கின்றது அத் தொலைக்காட்சி.
ஓவியா மீதுள்ள கோபத்தில் காயத்திரியின் பெயர் வெளியே கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறார். இந்நிலையில் காயத்திரியை மீண்டும் நல்வராக காட்டுவதற்கு இந்த தொலைக்காட்சி நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவே தோன்றுகிறது.
இதேவேளை, இன்றைய தினம் நடந்த டாஸ்கில், ஆரவ்வும் வீட்டின் சின்ன பிக் பாஸ்ஸாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் என்னமோ காயத்த்ரி வேலைவெட்டி இல்லாமல் கொடுக்கப்பட்ட பொருளை வைத்து ஒரு பொம்மையை செய்ய அதற்கு காயத்ரிக்கும் சின்ன பிக் பாஸ் பட்டத்தை கொடுத்து என்னமோ நிகழ்ச்சியை காயத்த்ரியை நல்லவளாக காட்ட மிகவும் பிரயத்தனம் செய்கிறது அத் தொலைக்காட்சி.
மேலும் செல்ஃபி ராஸ்க் இல் ஓவியாவின் கருத்து மட்டும் காட்டப்படவே இல்லை.
இது மாத்திரமன்றி, கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவில் இருக்கும் ஓவியாவை வேறு மிதமகாக கையாண்டு அவரை நிகழ்ச்சியின் வெற்றிக்குச் செல்லவிடாமல் தடுக்க முடிவு செய்திருக்கிறார். அது போன்று, ஓவியா ஒரு மலையாள நடிகை. எனவே இவற்றை முதன்மையான காரணங்களாக கருத்தில் கொண்டு, அவரை ஒதுக்குவதற்கான முடிவில் இருக்கிறார்கள் என்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.
எது எப்படியோ இந்த நிகழ்ச்சியானது விமர்சனங்களையும் முன் வைத்தவர்களையே அதனை விரும்பி பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை கூட்டுவதற்கான பல்வேறு உத்திகளையும் முயற்சிகளையும் இந்த தொலைக்காட்சி செய்துவருகிறது.
அது தான் அத் தொலைக்காட்சியின் பலமே. எனவே நாளைய காட்சிகளிலும் ஓவியா அழுவதைப் போன்றே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சின்னப்பிள்ளையாக பார்வையாளர்களின் செல்லப்பிள்ளையாக இருந்த ஓவியா இப்போதெல்லாம் அடிக்கடி அழுவதனையே காணக்கூடியதாக இருக்கின்றது.
ரசிகர்களின் வாக்குகளால் ஓவியா தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பாரோ என பயந்த பிக் பாஸ் இந்தவாரம் வாக்குகளை போடவேண்டாம் என முடிவுசெய்துள்ளது.
இதிலிருந்தே தெரிகிறது ஓவியா ஓரம் கட்டப்படுகிறார் என.