நாசிக் குழி வீக்கம் அடைவதால், சளி அதிகமாக முகத்தில் சேர்ந்து முக்கில் அடைப்பு மற்றும் காதில் வலியை ஏற்படுத்தி இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தை கெடுக்கிறது.
இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை மருத்துவக் குறிப்புகள்.
மூக்கடைப்பு பிரச்சனையை குணமாக்கும் மருத்துவம்
- ஒரு கப் தண்ணீரில் 2-3 பூண்டு பற்கள், 1 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து, தொடர்ந்து குடித்து வர வேண்டும்.
- 2-3 துளிகள் யூகலிப்டஸ் ஆயிலை மெல்லிய துணியில் ஊற்றி, அதை சுவாசிக்க வேண்டும். இம்முறையால் மூக்கடைப்பு பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
- ஒரு துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து பிழிந்து, முகத்தின் மீது 10-15 நிமிடம் வைக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு பலமுறை செய்தால் பலன் கிடைக்கும்.
- தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி ஆகிய பொருட்கள் சேர்ந்த டீயை தயாரித்து, குடித்து வந்தால் மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
- நல்லெண்ணெயில் சிறிதளவு மிளகுத்தூளை கலந்து, அதை மூக்கைச் சுற்றி தடவி, மூச்சை உள்ளிழுக்க வேண்டும். இம்முறையை தொடர்ந்து செய்தால் சளி வெளியேற்றப்பட்டு மூக்கடைப்பு தடுக்கப்படும்.
