
வீட்டில் ஒரு பாரம்பரிய பழக்கம் அவர் அவர் சாப்பிட்ட தட்டை அவர் அவர் கழுவி வைக்க வேண்டும் என்று வையாபுரி கூற ஓவியாவோ என் வீட்டில் வேலைக்காரன் தான் செய்வான் என்கிறார்.
ஓவியாவின் பதிலை கேட்ட சினேகனுக்கு கோபம் வருகிறது.
இப்படி யாருடனும் ஒத்துப் போகாமல் இருக்காதீர்கள் ஓவியா. அப்புறம் அனைவரும் உங்களையே டார்கெட் செய்வதாக புகார் தெரிவிக்காதீர்கள் என்று சக்தி கூறுகிறார்.
என்னால் முடியாது, நீ எது வேண்டுமானாலும் பண்ணிக்கோ என்று ஓவியா திமிராக பேச உன்கிட்ட எல்லாம் மனுஷன் பேச மாட்டான் என்று கோபப்படுகிறார் சக்தி.
ரசிகர்களிடையே ஓவியாவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதையடுத்து ஜூலிக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு ஓவியாவை வைத்து டிஆர்பி வியாபாரத்தை நடத்துகிறார்கள். இவர்கள் ஏஎப்பவும் ஓவியா அல்லது ஜூலியை வைத்து தான் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்..!