
அனைத்து மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்தும் வகையில், மாகாணசபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கும் வழங்கும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட வரைவை சிறிலங்கா அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
இந்த அரசியல்சட்ட வரைவுக்கு, அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலும், இந்த திருத்தச்சட்ட வரைவுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.