(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வகுப்புக்கள் நடத்த 16ஆம் திகதி முதல் தடை!!!

எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வகுப்புக்களை நடத்துவதை தடைசெய்வதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அந்த வகையில் 16ஆம் திகதி நள்ளிரவு 12 மணி தொடக்கம் 20ஆம் திகதி பரீட்சை நிறைவடையும் வரை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடாத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் அல்லது நிறுவனமொன்று இந்த உத்தரவை மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை