(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

சிங்கள மாணவர்களால் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பதற்றம் !?

கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக பகுதியை சிங்கள மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளதன் காரணமாக அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்கள மாணவர்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு வந்த நிலையில் (08) பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து (08) மாலை பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களின் பகுதி மற்றும் நிர்வாகப் பகுதிகளை சிங்கள மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் தாக்கப்பட்டு செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் மாலையிலிருந்து கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் அசாதாரண நிலை காணப்படுவதன் காரணமாக பொலிஸாருக்கு அறிவித்த போதிலும் விரைவில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சமுகம் தரவில்லை என பல்கலைக்கழகத்தினைச் சார்ந்தவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.




  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை