(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-2922542499121501", enable_page_level_ads: true });

Post views-

தரம் 5 பரீட்சை சட்ட திட்டங்களை மீறுவோருக்கு கடுமையான சட்டம் - பரீட்சைகள் திணைக்களம்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் சட்ட திட்டங்களை மீறி நடப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


நேற்று 16 ஆம் திகதி நள்ளிரவு முதல் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள் என்பவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 20 ஆம் திகதி புலமைப் பரிசில் பரீட்சை முடிவடையும் வரையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி மாதிரி வினாத்தாள்களை அச்சிடல், அவற்றை விநியோகித்தல், மாதிரி வினாத்தாள்களை வழங்குவதாக விளம்பரம் செய்வது, துண்டுப் பிசுரங்களை விநியோகித்தல், பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்துதல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை மீறி வகுப்புகளை நடத்துபவர்கள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்துக்கோ அல்லது அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்துடனோ தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ. எம்.என்.ஜே. புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..


    அதிகம் வாசிக்கப்பட்டவை