இணையத்
தள சேவைக்காக விதிக்கப்பட்டிருந்த பத்து சதவீத தொலைத் தொடர்பாடல் வரி
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் குறைக்கப்படும் என்று நிதி மற்றும்
ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
150 குதிரை வலு எஞ்ஜின்களைக் கொண்ட மோட்டார் சைக்கிளுக்கான 90 சதவீதமான வரி இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட இருக்கின்றது.
அரசாங்கத்தின்
சலுகை வட்டியின் கீழான கடன் திட்டங்களை அமுற்படுத்தத் தேவையான ஆலோசனைகள்
வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி முதல்
அமுலுக்கு வரும் வகையில் இந்தக் கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது
என்நும் அமைச்சர் கூறினார்.
சலுகை
வட்டிக்கென அரசாங்கம் 447கோடி ரூபாவிற்கான அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது.
இதன் மூலம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான தொழில் வாய்ப்புக்கள் உருவாகும்
என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ரன்
அஸ்வென்ன என்ற கடன் திட்டத்தின் கீழ் உயர்ந்த பட்சமாக 7 கோடி 50 லட்சம்
ரூபாவை கடனாகப் பெற முடியும். இதில் 50 சதவீதமான வட்டித் தொகையை அரசாங்கம்
ஏற்றுக்கொள்ள இருக்கின்றது நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர
மேலும் தெரிவித்தார்.
