நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்துவிட்டு
வீட்டில் வணங்கும் படத்தடியில் அர்ச்சனை தேங்காயை எடுத்து வைத்தபோது
உடைத்த தேங்காயின் பாதியில் அம்மனின் கண் இரண்டும் தெரியும்படியாக உள்ளமை
அப்பகுதியில் பெரும் அதிசயத்தையேற்படுத்தியுள்ளதால் பெரும் எண்ணிக்கையான
மக்கள் குறித்த வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனர்.
திருமதி சின்னப்பு பொன்னம்மா அவர்களின் வீட்டிலேயே குறித்த அதிசய நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் ஆதி வைரவர் ஆலயமும் அம்மனும் சேர்த்த ஆலயம் சிறிதாக அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
