உமா ஓயாவின் அபிவிருத்தித் திட்டத்தின் சுரங்கத்தில் இருந்து வெளியாகும்
திரவ நீரினால் வெல்லவாய, மொனராகலை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நோய் பரவும்
அபாயம் தோன்றியுள்ளது.
ஆகவே சுரங்க பாதையில் இருந்து வெளியாகும் விஷம் நிறைந்த திரவ நீர்
வெளியாகுவது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரச மட்ட
அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் மாகாண சபை முதல்வருக்கும் இலங்கை மனித
உரிமை கேந்திர நிலையம் கடிதம் அனுப்பியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உமா ஓயா அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்
குறித்த திட்டத்திற்கு எதிராக மக்கள் மத்தியிலும் சிவில்
அமைப்புகளிடத்திலும் பெரும் எதிர்ப்பு வெளிகிளம்புயுள்ளன.
உமா ஓயா சுரங்க நீர் விநியோக திட்டத்தின் ஊடாக பண்டாரவளை உள்ளிட்ட பதுளை
மாவட்ட எல்லைகளில் உள்ள வீடுகளில் வெடிப்பும் கிணறுகளில் நீர் வற்றும்
நிலையும் ஏற்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக அரசாங்க மட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டு
அமைச்சரவை உப குழுவும் நியமிக்கப்பட்டது. அது மாத்திரமின்றி குறித்த உப
குழுவினால் உமா ஒயா திட்டத்தினால் சேதமடைந்த வீடுகளுக்கும்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் முன்வந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் அளவில் உமா ஓயா திட்டத்தின் சுரங்க பாதையின்
ஊடாக கதரகொல்லவில் இருந்து மொனராகலை பகுதிகளுக்கு விஷமிக்க திரவ நீர்
வெளியாகி வருகின்றது.
இந்த திரவ நீர் வெளியேற்றத்துடன் மேலதிக போத்தல் துண்டுகள், பிளாஸ்டிக்
பொருள்கள் மற்றும் இராசானய திரவ பதார்த்தங்கள் வெளியாகி வருகின்றன.
இந்த விடயம் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைகள் கேந்திர
நிலையத்தின் ஏற்பாட்டாளவர் கீர்த்தி தென்னகோன் சுற்றாடல் மற்றும் மகாவலி
அமைச்சு, அரச முகாமைத்துவ துறை அமைச்சர் ரன்ஜித் மத்தும பண்டார, ஊவா மாகாண
முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க உள்ளிட்ட அரச மட்ட உயர் அதிகாரிகளுக்கு
கடிதம் அனுப்பியுள்ளார்.
